TNPSC Thervupettagam

சிறப்பு எடுப்பு உரிமைகள் உள்ளடக்கம் 

April 21 , 2020 1553 days 1746 0
  • சிறப்பு எடுப்பு உரிமைகள் உள்ளடக்கமானது (Special Drawing Rights basket)  5 வருடங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படின் அதற்கு முன்போ  மறு ஆய்வு செய்யப் படுகின்றது.
  • சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப் படும் புதிய SDRன் பொது ஒதுக்கீட்டை இந்தியா ஆதரிக்கவில்லை.
  • புதிய SDR (Special Drawing Rights) ஒதுக்கீடானது எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் புதிய அந்நியச் செலாவணி இருப்புகளுடன் அனைத்து 189 நாடுகளுக்கும் வழங்கப் படுகின்றது.
SDR பற்றி
  • SDR என்பது சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் அலுவல்பூர்வ நிதி இருப்புகளுக்கு ஆதரவளிப்பதற்காக 1969 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தினால் உருவாக்கப் பட்ட ஒரு சர்வதேச நிதி இருப்புச் சொத்தாகும்.
  • SDRன் மதிப்பானது அமெரிக்க டாலர், யூரோ, சீனாவின் ரென்மின்பி, ஜப்பானின் யென் மற்றும் பிரிட்டனின் பவுண்டு ஸ்டெர்லிங் ஆகிய 5 நாணயங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • SDR ஆனது IMF-ன் சார்பாகவும் இதர சர்வதேச அமைப்புகளின் சார்பாகவும் ஒரு அலகாகச் செயல்படுகின்றது.
  • SDR என்பது ஒரு நாணயமோ அல்லது IMF மீதான உரிமைக் கோரிக்கையோ அல்ல.
  • ஆனால், IMF உறுப்பு நாடுகளால் தடையின்றிப் பயன்படுத்தப்படும் நாணயங்கள் மீதான ஒரு சாத்தியமுள்ள உரிமைக் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்